தமிழகத்தில் இன்று 3943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 90,167ஆக உயர்வடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்றுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,074 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,201ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 60 சதவீதத்தை நெருங்குகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 2393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,327ஆக அதிகரித்துள்ளது.