👉ரூ.3,648 கோடியில் 131.95 கி.மீ., தூரம் அமைகிறது
👉உடுமலை;தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
👉தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, (என்.எச்., 83) 131.95 கி.மீ., நீளத்தில், 3,648 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
👉திண்டுக்கல், கமலாபுரம் முதல் #ஒட்டன்சத்திரம் வரை, 36.50 கி.மீ., தூரம்;
👉ஒட்டன்சத்திரம் முதல் மடத்துக்குளம் வரை, 45.38 கி.மீ., நீளம்;
👉மடத்துக்குளம்- பொள்ளாச்சி வரை, 50.07 கி.மீ., தூரம்.
👉என இந்த ரோடு என, மூன்று பிரிவுகளாக, டெண்டர் விடப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
👉புதிதாக அமையவுள்ள ரோட்டிற்கு குறுக்கே வரும், மாநில, ஊரகச்சாலைகள் பாதிப்பு ஏற்படாமல், 60 இடங்களில், 4.5 மீட்டர் முதல் 5.5 மீட்டர் உயரத்தில், கீழ் பாலங்கள் மற்றும் அமராவதி, சண்முகநதி ஆறுகளின் குறுக்கே, உயர்மட்ட பாலமும், புதிய ரோட்டிலிருந்து, நகரங்களுக்கு வர, அணுகுசாலைகள் அமைக்கப்படுகிறது.
👉புதிய நான்கு வழிச்சாலைக்காக, 2,429 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தபட்டு, விவசாய நிலங்கள், கட்டடங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
👉தற்போது, புதிய ரோட்டிற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
👉தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் கமலாபுரம் வரை, தற்போதுள்ள ரோட்டிற்கு இணையாக, முற்றிலும் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இந்த ரோடு, மதுரை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. தனியார் பங்களிப்பு, 60 சதவீதம், அரசு பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அடிப்படையில் ரோடு அமைக்கப்படுகிறது.நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான, நிலம் எடுப்பு, டெண்டர் என அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது ஆரம்ப கட்ட பணிகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் துவக்கியுள்ளன.ரோட்டிற்கு தேவையான மண், ஜல்லி கற்கள் சேகரித்தல், கட்டுமான தளவாடங்கள் நிறுவும் மையங்கள் என ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒரு சில பகுதிகளில், ரோடு அமைக்கும் வகையில், மண், பக்கவாட்டு சுவர் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது. விரைவில், ரோடு அமைத்தல், பாலங்கள் கட்டுமான பணிகள் என முழு வீச்சில் பணி நடக்கும்,' என்றனர்.