பேஸ்புக்கினால் வந்த வினை!! பெண் தீக்குளிப்பு..

காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை காதலன் பேஸ்புக்கில் வெளியிட்டதால், இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ராதாநல்லூரைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ. கல்லூரி படிப்பை இடைநிறுத்தம் செய்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் உதயபிரகாஷுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருடன் பேசுவதை சுபஸ்ரீ தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதய பிரகாஷ், சுபஸ்ரீயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதுடன், சுபஸ்ரீயின் வீட்டுக்கு வந்து மிரட்டியதாக கூறப்படுகிறது.


இதனால் மன உளைச்சலுக்குள்ளான சுபஸ்ரீ கடந்த 24ம் தேதி தீக்குளித்துள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சுபஸ்ரீயை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த சுபஸ்ரீ இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான உதயபிரகாஷை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.