நமது உடல் பருமனை குறைத்தால் கொரோனா போன்ற அனைத்து வகையான நோய்களில் இருந்தும் விடுபட முடியும் என பிரிட்டன் மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் உள்ளது. இங்கு ஆரம்ப காலகட்டத்தில் அதிகரித்து வந்த வைரஸ் பாதிப்பு தற்போது பிரிட்டன் அரசின் துரித நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தளர்வுகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளன. அதே வேளையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பிரிட்டன் மக்களிடையே வானொலியில் உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் உடல்பருமனை ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாக எதிர்கொள்ள வேண்டிய நிலையின் தான் இருப்பதாக தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தபோது உடல் எடையை குறைப்பது பற்றியும், உடல் பருமன் குறித்த பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றியும் பரிசீலிப்பதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
உடல் பருமன் குறித்து நான் மிகவும் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளேன் எனவும் நம்மால் நமது என்.எச்.எஸ் மருத்துவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை பார்த்து நான் பயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் உடல்பருமன் அதிகம் உள்ளவர்கள் பிரிட்டன் மக்கள் என தெரிவித்த அவர், உடல் பருமனை சமாளிக்க முடிந்தால் நாம் மகிழ்ச்சியாக கொரோனா போன்ற நோய்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போம் என்வும் போரிஸ் கூறியுள்ளார்.